யூஸுஃப் அலைஹி வஸ்ஸலாம்

யாகூப் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன்தான் யூஸுப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள். அவர்கள் எகிப்தில் ஆட்சிசெய்தார்கள். அக்காலத்தில் ஆயிரம் நாட்கள் வேலை செய்து நைல்நதிக்கு ஒரு கிளை நதி ஏற்படுத்தினார்கள். அதற்க்கு யூஸுஃபின் நதி என்று பெயர். யூஸுஃப் நதி ஓடிக் கொண்டிருக்கும் பகுதியை அல்பயும் என்றழைக்கிறார்கள். இந்நதியினால் அப்பகுதி முழுவதும் செழிப்பாக உள்ளது. இது எகிப்தின் தலைநகரம் கெய்ரோவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம்
ஜோர்டான் தலைநகரம் அம்மானிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் மத்யன் பகுதி உள்ளது.

மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார். அல்குர்ஆன் 7:85

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.

அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்! அல்குர்ஆன் 11:94-95


மனித நடமாட்டமில்லாத மத்யன் பகுதி.